காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
காற்றுள்ள போதே தூற்றிக்கொள் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
காசுள்ள போதே சேர்த்துக் கொள் என்ற பழமொழியை பலர் கேட்டிருக்கக்கூடும் முதல் பழமொழி பல ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் வசித்தவர்களுக்கு தெரியும். நகரத்திலேயே பிறந்து வாழ்பவர்களுக்கு இதைப் பற்றியறிய வாய்ப்பில்லை வயலிருந்து நெற்கதிர்களை அறுவடை செய்ததும் அதை களத்து மேட்டில் அடித்து நெல் மணிகளை பிரித்து வெயிலில் உலர்த்திய பிறகு அதில் கலந்துள்ள பதர்கள், தூசிகள், வைக்கோல், துகள்கள் ஆகியவற்றை நீக்க நன்றாக காற்று வீசும் போது முறத்தில் எடுத்து தூற்றும் போது கனமான் நெல் மணிகள் கீழே விழுந்து விடும் மற்றவையெல்லாம் காற்றில் பறந்து விடும். காற்றில்லாவிடில் இதை செய்ய முடியாது. அதனால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று பழமொழி வந்து விட்டது. ஆனால் அதன் உண்மையான பொருள் வேறு. இந்த உடலில் மூச்சுக் காற்று இருக்கும் போதே
மனதில் உள்ள தேவையற்ற தீய எண்ணங்களை, நச்சுப் பொருட்களை நீக்கி கொள்ள வேண்டும். மூச்சுக் காற்று நின்று விட்டால் எதையும் செய்ய முடிமல் போய் விடும். உடலில் உயிர் இருக்கும் போதே நல்ல செயல்களை செய்ய வேண்டும் அன்பு செய்ய வேண்டும் அதனால்தான் மூச்சுக் காற்றாக இயங்கும் இறைவனை அது உடலில் வந்து போகும் போதே அவனை துதித் தூய்ய வேண்டும் என்பதே அதன் உண்மையான பொருள்.
காசுள்ள போதே சேர்த்துக் கொள் என்ற பழமொழியை பலர் கேட்டிருக்கக்கூடும் முதல் பழமொழி பல ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் வசித்தவர்களுக்கு தெரியும். நகரத்திலேயே பிறந்து வாழ்பவர்களுக்கு இதைப் பற்றியறிய வாய்ப்பில்லை வயலிருந்து நெற்கதிர்களை அறுவடை செய்ததும் அதை களத்து மேட்டில் அடித்து நெல் மணிகளை பிரித்து வெயிலில் உலர்த்திய பிறகு அதில் கலந்துள்ள பதர்கள், தூசிகள், வைக்கோல், துகள்கள் ஆகியவற்றை நீக்க நன்றாக காற்று வீசும் போது முறத்தில் எடுத்து தூற்றும் போது கனமான் நெல் மணிகள் கீழே விழுந்து விடும் மற்றவையெல்லாம் காற்றில் பறந்து விடும். காற்றில்லாவிடில் இதை செய்ய முடியாது. அதனால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று பழமொழி வந்து விட்டது. ஆனால் அதன் உண்மையான பொருள் வேறு. இந்த உடலில் மூச்சுக் காற்று இருக்கும் போதே
மனதில் உள்ள தேவையற்ற தீய எண்ணங்களை, நச்சுப் பொருட்களை நீக்கி கொள்ள வேண்டும். மூச்சுக் காற்று நின்று விட்டால் எதையும் செய்ய முடிமல் போய் விடும். உடலில் உயிர் இருக்கும் போதே நல்ல செயல்களை செய்ய வேண்டும் அன்பு செய்ய வேண்டும் அதனால்தான் மூச்சுக் காற்றாக இயங்கும் இறைவனை அது உடலில் வந்து போகும் போதே அவனை துதித் தூய்ய வேண்டும் என்பதே அதன் உண்மையான பொருள்.
மேலே கூறும் கருத்து மட்டும் இல்லாமல், இன்னும் பல விஷயங்களுக்கும்
இந்த பழமொழியை எடுத்துக்காட்டாக கூறலாம் .
கால நேரம்
கால நேரம் பார்த்துச் செய்தால் வெற்றி எனக் கூறுவார்கள்.
அப்படியானால் காலம், நேரம் இரண்டும் ஒன்றா? வேறா?
இரண்டும் வேறு வேறு தான். காலம் என்பது சரியான தருணம் (Proper
Period) என்று வினைச் சொல்லாகப் பொருள் தரும். நேரம் என்பது பெயர்ச்
செல்லாக நேரம் (Time) என்று பொருள் தரும்.
ஒருநாளைக்கு 24 மணிநேரம் என்று கூறுகிறோம். சமயோசிதமாய், சரியான காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் கடந்து சென்றதால் குறிப்பிட்ட
நேரத்திற்கு குறித்த இடத்திற்கு செல்ல முடிந்தது. இப்போது இரண்டுக்கும் உள்ள
வித்தியாசம் நன்கு புரிந்திருக்கும்.
காலம் அறிதல்
இங்கு நேர நிர்வாகத்தை விட்டுவிட்டு சரியான தருணம் என்ற காலத்தை
மட்டுமே பார்க்க உள்ளோம். திருவள்ளுவர் பொருட்பால் அரசியல் காலம் அறிதல் என்ற
தலைப்பில் பத்து குறள்களைப் பாடி வைத்துள்ளார்.
விஞ்ஞானம்
உலகிலுள்ள பொருட்களைத் திட, திரவ, வாயுப் பொருட்கள் என
மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவைகளிலுள்ள காந்தத்தின் வெளிப்பாடு அழுத்தம்,
சுவை, மணம், ஒளி,
ஒலி என்ற தோற்றங்களாக வெளிப்படுவதைக் கணக்கிடும் நான்கு அளவுகளில்
ஒன்று காலம். மற்ற மூன்றும் இடம், தூரம், வேகம் ஆகியன ஆகும்.
இங்கு காலம் என்பது ஒரு செயல் தொடங்கி முடிவதற்கான அளவு என்ற
பொருளில் உபயோகமாகிறது. நாம் பார்த்துக் கொண்டிருப்பது வேறு.
காலத்தின் சிறப்பு பருவத்தே பயிர் செய், காற்றுள்ள
போதே தூற்றிக்கொள் போன்ற சொற்களை நாம் நன்கு அறிவோம். இவை காலம் என்ற பொருளில்
கூறுபவை. நேரம் என்பது போனால் வராது (EVERY MINUTE COUNTS) ஆனால்
சரியான காலத்துக்காக நேரத்தை விரயமாக்கி காத்துக்கொண்டிருக்க வேண்டும்.
‘ஓடுமீன் ஓட உருமீன் வருமளவும் காத்திருக்குமாம்
கொக்கு’ இதில் கொக்கு தனக்குத் தேவையான பெரிய மீன் வரும்
வரையில் பொறுமையாய் காத்திருந்து சிறிய மீன்களையெல்லாம் விட்டுவிடுவது
விளங்குகிறது.
“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க
சீர்த்த இடத்து”
என்று வெகு எளிதாகத் திருவள்ளுவர் இக்குறளில் விளக்கியுள்ளார்.
தனது இரைக்காக காத்திருக்கும் கொக்கு, காலம் வாய்த்தவுடன் இரையைக் கொத்துவது போல சரியான
தருணத்தில் செயலைச் செய்து முடிக்க வேண்டும். இதுவே காலத்தின் சிறப்பு.
அடிப்படை
சரியான காலத்தை தேர்வு செய்வதற்கு சில அடிப்படைக் காரணிகள் உள்ளன.
அவைகளை அகம் (உள்), புறம் (வெளி) என இரு பெரும் பிரிவுகளாய்
பிரிக்கலாம். அகம் என்பது நம் மனம் மற்றும் உடல்நிலை என்று கூறலாம். புறம் என்பதை
மற்ற புறச்சூழ்நிலைகள் அனைத்தும் என்று கூறலாம். காலம் என்பது இவ்விரண்டும் இணைந்த
நிலையாகும்.
சமயோசித புத்தி
நிதானத்துடன் அபாயத்தை வெல்லும் மனநிலை, மோட்டார்
வாகனத்தில் செல்கிறோம். நமக்கு முன் ஒரு கார் சென்று கொண்டிருக்கிறது. முந்திச்
செல்ல நினைக்கிaர்கள். தொலைவில் எதிரில் ஒரு பஸ் வருகிறது.
பஸ், காருக்கு இடைப்பட்ட தூரம், இரண்டின்
வேகம், உங்கள் மோட்டார் வாகனத்தின் வேகம் இவைகளைக் கணித்து,
ஒரு சில விநாடிகளில் முடிவெடுத்து வேகமாய் காரை முந்திச் செல்கிaர்கள், அல்லது முடியாது என வேகத்தைக் குறைத்து
காரின் பின்னாலேயே சென்று பஸ் கடந்து சென்ற பின் காரை முந்திச் செல்கிaர்கள்.
இந்த இரண்டில் ஒன்றை உங்களது மனநிலை, முந்தைய அனுபவங்களின்
அடிப்படையில் செய்கிaர்கள். இதுதான் சமயோசித புத்தி எனக்
கூறப்படுகிறது.
காலம் நமக்காக காத்திருப்பதில்லை. நாம் தான் காலத்துக்காக (சரியான
தருணத்துக்காக) காத்திருக்க வேண்டும். இதுவே சாணக்கிய சூத்திரம்.
கோட்டான் பலமுள்ள பறவை: காகம் அதனுடன் ஒப்பிடும் போது பலம் குறைந்த
பறவை. ஆனால் காகம் கோட்டானை வென்று விடுகிறது. எப்படி? பகல்
கோட்டானுக்கு கண்பார்வை தெரியாது. அதனால் சுலபமாகத் தாக்கி வெல்கிறது. மனிதனுடன்
ஒப்பிடும் போது ஆடு சாதுவான பிராணி. அதை ஒரு பையன் கல்லால் அடிக்கிறான். திடீரென
அதற்கு கோபம் வந்துவிடுகிறது. பையனைப் பார்த்துக் கொண்டே பின்னோக்கி நகருகிறது.
பையனுக்கோ சந்தோஷம். திடீரென பின்னால் நகர்ந்த ஆடு, முன்னோக்கி
வேகமாய் வந்து எதிர்பாராதவாறு பையனை முட்டித்தள்ளுகிறது.
இந்த இரு சம்பவங்களிலும் பகைவர்களுடன் சண்டையிடுவதற்கான சரியான
தருணத்தை இந்த உயிரினங்கள் போல அரசர்கள் காலமறிந்து செய்தால் வெற்றி எனத்
திருவள்ளுவர் கூறியுள்ளார்.
பஞ்சு உப்பு
“நான் உப்பு விற்கச் சென்றேன்: மழையாகப் பொழிந்தது,
பஞ்சு விற்கச் சென்றேன், காற்றாக அடித்தது. என்பது
நாம் அறிந்த வாக்கியம். மழை காலத்தில் உப்பு விற்கலாம் என்று எடுத்த முடிவு
சரியானதா? அதேபோல் காற்று வீசும் காலத்தில் பஞ்சு விற்கச்
செல்ல எடுத்த முடிவும் சரியானதா? பாதிப்பு வரத்தானே செய்யும்,
தேவையான முன்னேற்பாடுகளுடன் செயல்பட்டால் பலன் கிடைக்கும்.
சரியான காலமறிந்து நாம் செயல்பட்டால் அது நம்மிடமுள்ள செல்வத்தை
நம்மிடமிருந்து பிரிந்து போகாமல் கட்டும் கயிறாகச் செயல்படும் என்பார் செந்நாப்
புலவர்.
“அருவினை என்பன உளவோ” என்பது
குறள். தேவையான தகவல்கள், ஏற்பாடுகளுடன் சரியான காலத்தில்
செயல்பட்டால் நம்மால் முடியாதது எதுவுமே இல்லை.
“ஞாலம் கருதினும் கைகூடும்” இடத்திற்கேற்றவாறு
காலமறிந்து செயல்பட்டால் இந்த உலகமே நமக்குத் தேவையென்றாலும் கட்டாயம்
பெறமுடியும்.
நெப்போலியன்
நமக்குத் தெரியும், உலகை வெல்ல திட்டமிட்டார். போரிட்டார். எங்கும்
வெற்றி. ஆனால் ரஷ்யாவைத் தாக்கிய போது காலமறிந்து செயல்படா ததால் தோல்வியைத்
தழுவினார். காரணம் குளிர், பனியில் இவரது வீரர்கள் கடுமையான
பாதிப்புக்கு உள்ளாயினர்.
பில்கேட்ஸ் பெரும்பாலான வாசகர்களுக்குத் தெரிந்தவர். பணம் ஒன்றே
வாழ்வின் குறிக்கோள் என்று செயல்படவில்லை.
தேவைக்கு போதும் என்ற உணர்வு வந்தவுடன் அறக்கட்டளை ஆரம்பித்து
உலகின் பல நாடுகளில் இன்று மருத்துவ உதவி என்ற வகையில் மிகப் பிரமாதமாய்
செயல்பட்டு,
முன்பைவிட சாதாரண மக்களிடமும் பிரபலமாகி வருகிறார். காரணம், காலமறிந்து அவர் செயல்பட்டதுதான்.
குறிக்கோள் தடைகள்
குறிக்கோளில்லாத வாழ்க்கை முடிவில்லாத பயணம் போன்றது. உள்ளத்துப்
பார்வை இருந்தால் தான் நமது குறிகோளை அடைய முடியும். குறிக்கோளை எண்ணும் போது
எல்லாம் நமக்கு புத்துணர்ச்சியும், புதிய சக்தியும் வரவேண்டும்.
பள்ளிக்குழந்தைகளிடம் பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற்றால்
பரிசுப்பொருள் வாங்கித் தருவதாய் கூறிப்பாருங்கள். தேர்வு முடிந்து புள்ளிகள்
வரும்வரை இந்தப் பரிசு அவர்களிடம் நன்கு படிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை அணையாமல்
காப்பதுடன் மிக விருப்பத்துடன் மகிழ்ச்சியைத் தரும்.
இதுபோல் சின்னச், சின்ன குறிக்கோள்களை இலக்காக வைத்து செயல்படவும்,
குறிக்கோள்களை நிர்ணயிக்கவும் பயிற்சி தர வேண்டும். அவைகளை அடைய
தடைகள் எவையென்று மனதில் படுமாறு கூறவேண்டும். பயம், கோபம்,
பொறாமை, விரக்தி, வெறுப்பு
போன்ற மனநிலைகள்தான் முக்கியமான சுயதடைகள். வெளித்தடைகளை நம் அறிவாற்றலால் நமக்கு
சாதகமாய் மாற்றிக்கொள்ள முடியும். நிலத்தில் இயல்பாகவே களைகள் உள்ளன. விதை
முளைக்கும் போது களைகளும் முளைக்கத்தான் செய்யும். அதனை அப்புறப்படுத்துவது போல
நம் உள்ளத்திலும் மனத்தடைகள் வரத்தான் செய்யும். இத்தடைகளை நீக்கி விட்டாலே
மகிழ்ச்சிதான. தொடர்ந்து வெற்றிதான்.
ஆடிப்பட்டம் தேடி விதை
இது விவசாயிகளின் பொன்மொழி. மழை இயற்கை வளங்களின் அடிப்படையில்
செயல்பட்டால் பலன் மகிழ்ச்சி தரும் என்பதை இதனால் உணர முடியும். ராஜா தேசிங்கு
சிறுவனாக இருந்த போது எவராலும் அடக்க முடியாத முரட்டுக் குதிரையை மிகவும் சுலபமாக
அடக்கினார் எனப் படித்திருக்கிறோம்.
மற்றவர்கள் வரும்போது அந்தக் குதிரை தன் நிழலைப்பார்ப்பது போல
சூரிய வெளிச்சம் அதன் முகத்தில் படாமல் நிறுத்தினார்கள். அதனால் நிழலைப் பார்த்து
பயந்த குதிரை வேகம் கொண்டு வந்தவர்களைத் தள்ளிவிட்டு ஓடியது. இதை அறிந்த தேசிங்கு
குதிரையிடம் சென்றவுடனேயே அதனைத் திருப்பி அதன் முகம் சூரியனைப்
பார்த்திருக்குமாறு செய்தார். நிழல் தெரியாததால் அமைதியாக இருந்த குதிரை மீது தாவி
ஏறினார்.
தன் மீது ஒருவன் ஏறியதால் வெகுண்டு ஓடிய குதிரையின் மீது
நன்றாகப்படுத்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். ஓடிய குதிரை களைத்து நின்றது.
அடக்கி வென்றார் தேசிங்கு. இதை நினைவில் கொண்டால் நம் வாழ்க்கையிலும் வெற்றி
பெறுவதற்கான சூழலை இது உருவாக்கும்.
பணிதல்
காற்றடிக்கும் போது நேராக நிற்கும் மரங்கள் வீழ்ந்து விடும். ஆனால்
காற்றின் வேகத்துக்கு ஏற்ப சிறிது வளைந்து கொடுத்த பின் தலை நிமிரும். (நாணல்)
மூங்கில் கீழே விழாது. அதேபோல் நல்ல காரியங்கள் செய்யும் போது எதிர்வரும் தடைகளை
நீக்க நம் மனோ சக்தியே நமக்கு வழிகாட்டும்.
நடந்து செல்லும் ஒருவரைத் தொடர்ந்து நாய் ஒன்று வேகமாக ஓடுகின்றது.
நீங்கள் சரியான சமயத்தில் அதன் மீது கல்லெறிந்து விரட்டி விடுகிaர்கள்.
அதனால் அவர் நாய்க் கடியில் இருந்து தப்பிவிட்டார். இதுதான் சரியான நேரத்தில்
செய்த செயல்.
சிலரை பச்சோந்தி (TIMELY SERVER) என்று கூறுவோம். தனது கொள்கை,
குணங்களை காலத்துக்கேற்றவாறு மாற்றிக் கொண்டது போல் நடிப்பவர்களைச்
சொல்லும் வார்த்தை இது. இவர்கள் நடிகர்கள்.
காலம் என்பது என்றும் நிலைத்திருப்பது. நாம் தான் இடையில் பிறந்து
வாழ்ந்த, இறந்து விடுகிறோம். நல்ல காலமா, கெட்ட காலமா என்பது
ஒவ்வொருவரும் செயலைச் செய்ய தேர்வு செய்த தருணம், நோக்கம்,
செயல்பட்ட விதம் போன்றவற்றால் தான் தீர்மானிக்க முடியும்.
நல்லது நினைக்கின் நல்லதே நடக்கும். வெற்றியாளராக திட்டமிட்டு
செயல்பட்டால் நிச்சயம் வெற்றியாளராக முடியும். ஏற்கனவே நம் அனைவருக்கும் நல்ல
காலம் பிறந்துவிட்டது. சந்தோஷமாகச் செயல்படுங்கள்.