FRM tamilsjkt.blogspot.com
KBAT என்றால் என்ன ….
KBAT (உயர்நிலை சிந்தனைத் திறன்) என்றால் என்ன ….
சில வாரங்களுக்கு முன் புத்ரா ஜெயாவைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரியுடன்(மலாய்க்கார நண்பர்) மாலை நேர காப்பிக்கு நேரம் இருந்தது. பல விடயங்களைப் பேசிக் கொண்டு வந்த எங்கள் பேச்சு KBAT என்று சொல்லக்கூடிய உயர்நிலை அல்லது மேனிலைச் சிந்தனை பக்கம் திரும்பியது. அப்போது அவர்,
அது அப்படி ஒன்றும் பயப்படக்கூடியது அல்ல….KBAT என்றால் என்ன ?
ஒரு குறிப்பிட்ட சிக்கலுக்கு அந்தேரத்தில் தன் சிந்தனை அல்லது அறிவைப் பயன்படுத்தி தீர்வு காணுதலே உயர்நிலை சிந்தனைத் திறன்(KBAT) என்றார்.
அதற்கு ஒரு கதையும் சொன்னார்.
ஒரு பொறியியல் பட்டதாரி. முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றவர். நிறைய வெளிநாடுகளுக்கும் உள்நாடுகளுக்கும் பயிற்சிகள், கருத்தரங்குகள் வழங்குபவர். அன்று ஒரு முக்கியக் கருத்தரங்கு. அவர்தான் சிறப்புப் பேச்சாளர். தன்னுடைய பி.எம்.டபள்யூ. காரை எடுத்துக் கொண்டு காலையிலேயே புறப்பட்டவர் பெட்ரோல் அளவைப் பார்க்கவில்லை.(நிறைய படித்தவரல்லவா…)
சற்று தூரம் சென்றவர்க்கு வாகனத்தின் சமிக்ஞை இன்னும் 10 கிலோ மீட்டர் மட்டுமே செல்ல முடியும் என்று அச்சுறுத்தியது. பெட்ரோல் நிலையம் ஏதும் அருகில் இருக்கிறதா என்று துணைக்கோள வழிகாட்டியில் சோதித்தார். 12 கிலோ மீட்டர் என்று காட்டியது. அப்படின்னா..என்று சிந்திப்பதற்குள் வாகனமும் நின்றது. ஒருகணம் நிலைகுத்திப் போனார். எப்படி…. சிறப்புப் பேச்சாளர் ஆயிற்றே…
அந்நேரம் ஒரு முதியவர் மிதிவண்டியில் வந்து கொண்டிருந்தார். அவரை இவரும் நிறுத்தினார்.
“சரி, நான் போய் மிதிவண்டியில் வாங்கி வருகிறேன்…பணம் தாருங்கள் ” என்றார். நம்மாளும் ஒரு 50 ரிங்கிட்டை அவரிடம் நீட்ட, ஐயாவும் கிளம்பி விட்டார். பிறகுதான் இவருக்கு சந்தேகம் தலைதூக்கத் தொடங்கியது. அவர் வரலன்னா..ஏமாத்தி ஓடிட்டாருன்னா..என பல்வேறு சிந்தனைகள்…
சற்று நேரத்தில் ஐயாவும் பெட்ரோலை ஒரு பெரிய புட்டியில் வாங்கிக் கொண்டு வந்து விட்டார்.
சரி… இப்போதுதான் நீங்கள் கேட்ட KBAT ஆரம்பிக்கிறது..
எப்படி ஊற்றுவது…அப்படியே கண்டிப்பாய் ஊற்ற முடியாது…சுற்றும் முற்றும் நடந்தார். அவரின் தவிப்பைப் பார்த்த முதியவருக்கு நிலைமை புரிந்தது. அருகில் இருந்த ஒரு கனிமநீர் புட்டியை(mineral water bottle) எடுத்தார். அதை அருகிலிருந்த ஒரு பாறையில் வைத்து அடிபாகத்தை வெட்டினார். புனல் தயாரானது. இனி தீர்வு தானே…..
அந்த தேரத்தில் அந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டாரே… அதுதான் உயர்நிலைச் சிந்தனை(KBAT)என்றார்.
என்னதான் பொறியியல் படித்திருந்தாலும், அந்த நேரத்தில் அந்தச் சிக்கலுக்கு அவரால் ஒரு தீர்வைக் காணமுடியவில்லை. படிக்காத ஒரு முதியவர் தீர்வு கண்டார்.
சரி, நமது விடயத்துக்கு வருவோம்…
வகுப்பறையில் மந்தமான மாணவன் என ஒதுக்கப்படும் ஒரு மாணவனும் இதுபோன்ற சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும். எனவே, அவர்களுக்கும் ஒரு வாய்ப்பளியுங்கள்…
எ.கா.: வெள்ளப் பேரிடர்
இ ) வெள்ளப் பேரிடர்களை தவிர்ப்பதற்கு நீ என்ன செய்வாய் ?
என்று கேட்கப்பட்டால் அதற்கு அவர் கூறும் பதில்களை ஏற்றுக் கொள்ளுங்கள்..தவறு
இருந்தால் கொஞ்சம் சுட்டிக்காட்டி திருத்துங்கள்…
இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு வாசிப்பு. வாசிப்பை மாணவரிடம் வலியுறுத்துங்கள்.. ஏனெனில், அவன் சிந்திக்க முடியும்.. ஆனால், அதை எழுத வேண்டுமல்லவா..
No comments:
Post a Comment